Pages

Sunday 16 December 2012

இளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்

  எழிதில் அனைவருக்கம் கிடைக்ககூடிய பழம். ஆப்பிளைக் காட்டிலும் மிகவும் விலை குறைவு. இதன் பயன்கள் மிக அதிகம். பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. பப்பாளி உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பப்பாளியில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும். 

பப்பாளியில் உள்ள சத்துக்கள்:.....

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக் அமிலம், பொட்டசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, நார்ச்த்துக்கள் உள்ளன. பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் ‘சி’யும் மிக அதிகமாகஇருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2மற்றும் நியாசினும் உண்டு.

நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும். பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்

No comments:

Post a Comment